பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 ஏம்.எல்.ஏக்கள் சந்தித்து தங்களது அரசியல் நிலைபாடு குறித்து விவாதித்து வருகின்றனர்.
அமமுகவில் தினகரனின் நம்பிக்கைகுரிய நபராக இருந்த செந்தில் பாலாஜி சில அதிருப்திகள் காரணமாக திமுகவில் இணைந்தார். இதனால், அமமுகவில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பங்கள்தான் இப்போது சசிகலாவுடனான சந்திப்பு வரை சென்றுள்ளது.
இந்த சந்திப்பில் அமமுக கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவென்பதையும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் நிலைபாடு என்னவென்பதும் விவாதிக்க கூடும் என தெரிகிறது.
இந்நிலையில், டிடிவி தினகரனும் அவர்களுடன் சென்றுள்ளாரா என்பது குறித்த உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், செந்தில் பாலாஜியை தொடர்ந்து தினகரனின் நம்பிக்கை பாத்திரமான தங்க தமிழ்செல்வன் குறித்த செய்தி கசிந்துள்ளது.
அதவாது, சசிகலாவுடனான இந்த சந்திப்பில் திருப்தி இல்லை என்றால் அவர் திமுக பக்கம் சாய்வதா? அல்லது அதிமுக பக்கம் சாய்வதா? என்ற குழப்பத்தில் உள்ளார் என செய்திகள் வெளியாகிறது.
ஆனால், தங்க தமிழ்செல்வனோ நான் சசிகலா, தினகரனின் விசுவாசி. எனவே அதிமுகவுக்கோ திமுகவுக்கோ நான் கட்சி தாவ மாட்டேன். என் பணி அமமுகவில் தொடரும் என தெரிவித்துள்ளார்.