அதிமுக பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் எம்பி நீக்கம்: கனிமொழியை புகழ்ந்ததுதான் காரணமா?

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (19:14 IST)
அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் தான் வகித்து வந்த வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், கனிமொழி எம்பி மற்றும் டிகேஎஸ் உள்பட ஒரு சில திமுக எம்பிக்களை  பாராட்டி பேசினார்
 
குறிப்பாக கனிமொழி அவர்கள் தனது சகோதரி போன்றவர்  என்றும் தனக்கு நாடாளுமன்றத்தில் பல்வேறு உதவிகளை செய்துள்ளார் என்றும் கூறியிருந்தார். இது அதிமுக மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் எம்பி இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்