Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை விட இந்த பதவிதான் கெத்து! – ஓபிஎஸ்ஸிடம் பேச்சு வார்த்தை??

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (14:33 IST)
அதிமுக செயற்குழு கூட்ட விவாதத்தை தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே நடைபெற்ற வாக்குவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அதிமுக அமைச்சர்கள் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அதிமுகவில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். முதல்வர் வேட்பாளர் குறித்து 7ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறிய நிலையில் தற்போது தேதி தள்ளி வைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக கட்சியில் முதல்வரை விட பொது செயலாளருக்கே அதிக அதிகாரங்கள் உண்டு என கூறப்படும் நிலையில் ஓபிஎஸ் பொதுசெயலாளராக அவரிடம் அமைச்சர்கள் பேசி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments