Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வருடன் அமைச்சர்கள் அவசர ஆலோசனை: ஆட்சி கலைய வாய்ப்பு?

முதல்வருடன் அமைச்சர்கள் அவசர ஆலோசனை: ஆட்சி கலைய வாய்ப்பு?

முதல்வருடன் அமைச்சர்கள் அவசர ஆலோசனை: ஆட்சி கலைய வாய்ப்பு?
, திங்கள், 5 ஜூன் 2017 (16:31 IST)
பரப்பன அக்ராஹர சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க டிடிவி தினரகன் 10 எம்எல்ஏக்களுடன் பெங்களூரு சென்றுள்ளார். சிறையில் தினகரன் சசிகலாவை சந்தித்து வரும் அதே வேளையில் தலைமைச்செயலகத்தில் 19 தமிழக அமைச்சர்கள் கூடி அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


 
 
ஏற்கனவே தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டு தற்போது உள்ள சில அமைச்சர்களை நீக்கிவிட்டு, தான் சொல்லும் சில எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் எனவும், தானக்கு வேண்டிய சில அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்க வேண்டும் எனவும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
 
இல்லையென்றால் தனது ஆதரவு எம்எல்ஏ எம்எல்ஏக்கள் மூலம் சட்டசபை கூடி, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும் போது வெட்டுத்தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்படும். ஒரு வேளை தினகரன் கூறிய அமைச்சர்களை நீக்கிவிட்டு தினகரன் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கினாலும் நீக்கப்பட்ட அமைச்சர்களால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும்.
 
இந்த சூழலில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க தினகரன் பெங்களூர் சென்றுள்ளார். ஆனால் அதே நேரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் ஒன்று கூடி தலைமைச்செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
 
ஆலோசனை நடத்திய அமைச்சர்கள் அதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனால் அதிமுக வாட்டாரத்தில் பதற்றம் நிலவி வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எந்த பக்கம் சாய்ந்தாலும் ஆட்சி கவிழும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கத்தார் நாட்டை கழட்டிவிட்ட அரபு நாடுகள்