Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர சொன்னாங்களா? வர வேணாம்னு சொன்னாங்களா? – குழம்பிய அமைச்சர்கள்!

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (09:29 IST)
அதிமுக செயற்குழு கூட்டம் முடிந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்களை சென்னை வர சொல்லி தலைமை அழைப்பு விடுத்துள்ளதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து இருவரையும் அதிமுக அமைச்சர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அக்டோபர் 6ம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ”6ம் தேதி அனைத்து எம்.எல்.ஏக்களும் வர சொல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது. 7ம் தேதி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்போம்” என கூறியுள்ளார்.

ஆனால் திண்டுக்கல் சீனிவாசன் “6ம் தேதி எம்.எல்.ஏக்களை சென்னை வர சொல்லி தலைமை எங்களுக்கு சொல்லவில்லை” என்று கூறியுள்ளார். இதனால் அதிமுக வட்டாரத்தில் குழப்பம் ஏற்படுள்ளது. இந்த குழப்பத்தினால் எம்.எல்.ஏக்கள் சிலர் விடுபட்டு போக வாய்ப்பிருப்பதாகவும் பேசி கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments