Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பணப்பட்டுவாடா செய்த கனகராஜ் எம்.எல்.ஏ - வைரல் வீடியோ

பணப்பட்டுவாடா செய்த கனகராஜ் எம்.எல்.ஏ - வைரல் வீடியோ
, திங்கள், 4 டிசம்பர் 2017 (14:12 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ.வான கனகராஜ் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் நபராக இருக்கிறார். 
 
இந்நிலையில், மீண்டும் ஒரு வீடியோ சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளார். கோவையில் இன்று நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக, இவரது ஆட்களும் களப்பணி ஆற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.
 
அதில், தலைக்கு இவ்வளவு பணம் என கனகராஜ் கொடுக்கிறார். அதேபோல், அருகே பல அட்டைபெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, அந்த அட்டைப்பெட்டி முழுவதும் பணம் எனவும், முதல்வர் கலந்து கொள்ளும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் ஆட்களை திரட்டவே கனகராஜ் தனது ஆட்களிடம் பணம் கொடுக்கிறார் என செய்திகள் வெளியானது. 

அவரது அருகிலிருந்த யாரோ ஒரு நபர் வீடியோ எடுத்து வெளியிட்டுவிட்டார். சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து, இது தொண்டர்கள் வண்டிக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்காக கொடுத்த பணம். அந்த அட்டைப்பெட்டிகளில் இருந்தது வெறும் வாட்டர் பாக்கெட் என கனகராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குறைந்த விலையில் அதிக ஜிபி: அதிரடி திருத்தங்களுடன் ஏர்டெல் புதிய யுக்தி!!