Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்டிப்பா பாஜகவுடன் கூட்டணி இல்ல; நாளை கூட்டத்தில் முக்கிய முடிவு! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (12:28 IST)
அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி குறித்து தொடர் பரபரப்பு நிலவி வரும் நிலையில் நாளை ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.



கடந்த 2019 முதலாக நாடாளுமன்றம், சட்டமன்றம் என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து வருகிறது. தற்போது 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில் அதிமுக – பாஜக இடையே விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சமீப காலமாக பேசி வரும் பேச்சுக்கள் அதிமுகவினரின் கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றது. அண்ணாமலையை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என பாஜக தலைமைக்கு அதிமுக கோரிக்கை விடுப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆரம்பம் முதலே அதிமுக – பாஜக கூட்டணி முடிவுக்கு வர உள்ளதாக கூறி வருகிறார். ஆனால் அதிமுகவில் உள்ள மற்ற பிரமுகர்கள் அதுகுறித்து கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும் என கூறி வருகின்றனர். நாளை நடைபெற உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவின் நிலைபாடு குறித்த முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தற்போது கூறியுள்ளார். இது கூட்டணி முறிவு குறித்த செய்தியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments