Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனை புகழ்ந்த காம்பீர்

Advertiesment
Pakistan team wc
, சனி, 23 செப்டம்பர் 2023 (17:18 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்  பாபர் அசாம் பற்றி இந்திய முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளர்.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. உலகக் கோப்பை இந்தியாவில்  நடக்க உள்ளதால் போட்டிகள் நடைபெறும்  நிலையில், சமீபத்தில் ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான தீம் பாடல் வெளியானது.

இந்த நிலையில்  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான  பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது.

இதில், பாபர் ஆசாம் தலைமையிலான 15 பேர் கொண்ட  அணியில், பாபர் அசாம், ஷதாப் கான்,  பகர் ஜமான், இமாம், அப்துல்லா, ரிஸ்வான், இப்திகார், ஆகா சல்மான், அவுத் ஷகீல், நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, ராஃப், ஹான் அலி, உஸ்மா மிர், வாசின் ஜே ஆர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்..

இத்தொடரில், காயம்  காரணமாக  அந்த அனியின் நட்சத்திர வீரர பந்துவீச்சாளர் நசீம் ஷா இடம்பெறவில்லை எனத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்  பாபர் அசாம் பற்றி இந்திய முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளர்.

அதில்,'' 50 ஓவர் உலகக் கோப்பையில் பாபர் அசாமின் விளையாடும் திறன் என்பது தீயாக இருக்கும். இந்த உலகக் கோப்பையில், இந்திய வீரர் விராட் கோலி, நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் இருந்தாலும், பாபர் அசாமிற்கு தனித்துவ திறமையுள்ளது ''என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக் கோப்பை அணியில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் யார்?... விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த ஷமி!