Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் ஆர்.என்.ரவி உயிருக்கு ஆபத்து: பிரதமர், ஜனாதிபதிக்கு புகார்

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (08:26 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உயிருக்கு ஆபத்து என பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர்களுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  மயிலாடுதுறை சென்றபோது அவரது கார் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து ஆளுநர் மாளிகை டிஜிபியிடம் விளக்கம் கேட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது 
 
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  உயிருக்கு அச்சுறுத்தல் என அதிமுக புகார் மனு அளித்துள்ளது. திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு புகார் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஆளுனர் உயிருக்கு அச்சுறுத்தல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் பழக்கம், பாலியல் வன் கொடுமை ஆகியவை தமிழகத்தில் அதிகரித்து இருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்