Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கறுப்பு ஆடுகளை குறிவைக்கும் ஜெயலலிதா - அலறலில் அதிமுக நிர்வாகிகள்

கறுப்பு ஆடுகளை குறிவைக்கும் ஜெயலலிதா - அலறலில் அதிமுக நிர்வாகிகள்

Advertiesment
கறுப்பு ஆடுகளை குறிவைக்கும் ஜெயலலிதா - அலறலில் அதிமுக நிர்வாகிகள்

கே.என்.வடிவேல்

, ஞாயிறு, 19 ஜூன் 2016 (15:34 IST)
சட்ட மன்றத் தேர்தலில், அதிமுக தோல்விக்கு காரணமான கறுப்பு ஆடுகளை ஒழிக்காமல் விடமாட்டேன் என முதல்வர் ஜெயலலிதா வெடித்துள்ளார்.
 

 
சென்னையில் அதிமுக செயற்குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் பொது செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கலந்து கொண்டு பேசுகையில், கட்சியில சாதாரணமாவர்களை கூட எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சிலருக்கு அமைச்சர் கூட வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் தங்களது விசுவாசத்தை திமுக பக்கம் காட்டியுள்ளனர்.
 
நமது உழைப்புக்கு இவ்வளவு குறைந்த இடங்களா கிடைக்கும்? நாம் குறைவான இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு காரண் நம்ம கட்சியில் உள்ள சில கறுப்பு ஆடுகள் தான். 
 
நாம ஜெயிக்கலைன்னாலும் பரவாயில்லை, அடுத்தவன் ஜெயிக்கக்கூடாது என்றும் சிலர் வேலை செய்துள்ளனர். கட்சிக்குள் உள்ளடி வேலை பார்த்தவங்களையும் எனக்கு நன்கு தெரியும்.
 
எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்காதீங்க. யாரு, என்ன செஞ்சீங்க, என்ன செஞ்சிட்டு இருக்கீங்க? என எல்லாமே எனக்கு தெரியும். அந்த கறுப்பு ஆடுகளை களையெடுக்காமல் விடமாட்டேன் என கர்ஜித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் அதிமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்த தொகுதியில் உள்ளடி வேலை பார்த்த நிர்வாகிகள் குறித்து, உளவுத்துறை மூலம் தகவல் திரட்டியுள்ளனர். அவர்களது லிஸ்ட் முதல்வர் ஜெயலலிதா கையில் ரெடியாக உள்ளதாம். 
 
ஆக, கறுப்புகளை களையெடுக்க முதல்வர் ஜெயலலிதா தயராகிவருகிறார். இதனால், அதிமுகவில் அலறல் குரல் ஒலிக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் பிரபல ரவுடி பப்லுவுக்கு போலீஸ் வலைவீச்சு