Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக சட்டசபை தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (16:48 IST)
கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் அதிமுகவும், கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியலை சற்றுமுன் அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் அதிமுக மூன்று தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாகவும், இந்த மூன்று வேட்பாளர்கள் பெயர்களையும் அறிவிப்பதாகவும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
 
இதன்படி காந்திநகர் தொகுதியில் கர்நாடக மாநில கழகச் செயலாளர் யுவராஜும், ஹனூர் தொகுதியில் ஆர்.பி.விஷ்ணுகுமாரும், கோலார் தங்கவயல் தனித்தொகுதியில் கர்நாடக மாநில அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் அன்புவும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மூன்று தொகுதிகளில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

ஜூன் மாத சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments