Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இழுபறி இல்லாம ஒரே ட்ரிப்ல முடிக்கணும்! – அதிமுக – தேமுதிக இன்று மாலை சந்திப்பு!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (11:42 IST)
அதிமுக – தேமுதிக கூட்டணி அமைப்பதில் சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில் இன்று மாலை இரண்டு கட்சி நிர்வாகிகளும் சந்தித்து பேச உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்து தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசாமல் இருந்து வந்த அதிமுக இன்று அமைச்சர் தங்கமணி தலைமையில் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட இருந்தது.

இந்நிலையில் அதிமுகவில் தேமுதிகவுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என கருதிய தேமுதிகவினர் அமைச்சர் தங்கமணியுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை தவிர்த்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தேமுதிக விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.

இன்று மாலை அதிமுக – தேமுதிக நிர்வாகிகள் சந்தித்துக் கொள்ள உள்ள நிலையில் அமைச்சர் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோருடன் தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ளதால் கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடுகளை அதிமுக நேர்காணலுக்கு முன்னதாக முடிக்க அதிமுகவினர் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments