Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இணக்கமாக செயல்படும் அதிமுக - தேமுதிக: என்னவா இருக்கும்??

Advertiesment
அதிமுக
, செவ்வாய், 4 ஜூன் 2019 (08:55 IST)
கூட்டணி அமைத்த அதிமுக மற்றும் தேமுதிக வழக்கத்துக்கு மாறாக இணக்கமாக செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சரத்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர். பாமக மற்றும் பாஜக சார்பில் யாரும் கலந்துக்கொள்ளவில்லை. 
 
அதே போல சில தினங்களுக்கு முன்னர் தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிலும் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கலந்துக்கொண்டார். கூட்டணி கட்சிகளாக மாறிய பின்னர் அதிமுக - தேமுதிக இணக்கமாக செயல்பட்டு வருகிறதாம். 
 
அதிமுகவில் இருந்து எந்த அழைப்பு வந்தாலும் மறுக்காமல் தேமுதிக தரப்பில் ஏற்றுக்கொள்ளப்படுகிறதாம். அதேபோல்தான் அதிமுகவும் தேமுதிகவின் அழைப்பை ஏற்றுக்கொள்கிறதாம். இந்த திடீர் இணக்கம் என்ன காரணத்திற்காக என தெரியாமல் தொண்டர்களே குழப்பத்தில் உள்ளார்களாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெல்லை வேட்பாளர் உள்பட அதிமுகவில் இணைந்த 15 அமமுகவினர்!