ஏறுதழுவுதல் தமிழர் அடையாளம் எத்தனை தடைகள் வந்தாலும் அதை முறியடிப்போம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பீட்டா சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுவதாகத் தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில், ஏறுதழுவுதல் நம் அடையாளம் எத்தனை தடைகள் வந்தாலும் அதை முறியடிப்போம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,
ஏறு தழுவுதல் நம் அடையாளம். இயற்கையோடும் கால்நடைகளோடும் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சி. ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதி மன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.