Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் கட்சியில் சேருகிறாரா நடிகை ரோஜா? அவரே அளித்த பேட்டி..!

Advertiesment
விஜய் கட்சியில் சேருகிறாரா நடிகை ரோஜா? அவரே அளித்த பேட்டி..!

Siva

, திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (06:55 IST)
நடிகை ரோஜா தமிழ்நாடு அரசியலுக்கு வரப்போவதாகவும் குறிப்பாக விஜய் கட்சியில் இணைய போவதாகவும் கூறப்படும் நிலையில் இதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் இந்த கட்சியில் மாற்றுக் கட்சியில் உள்ள பிரபலங்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வரும் நடிகை ரோஜா அவரது ஆட்சியில் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகவும் இருந்தார்.

ஆனால் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ரோஜா மாற்றுக் கட்சியில் சேர இருப்பதாக கூறப்பட்டது. குறிப்பாக விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நான் விஜய் கட்சியில் சேர போவதாக கூறப்படுவது தெலுங்கு தேசம் கட்சியின் பொய்ப்பிரச்சாரம் என்றும் நான் ஏன் விஜய் கட்சியில் இணைய வேண்டும் என்றும் எனக்கு விஜய் அவ்வளவு நெருக்கம் கிடையாது என்றும் தெரிவித்தார்.

சிரஞ்சீவி கட்சி தொடங்கும் போதே, நான் அவருடைய கட்சியில் சேரவில்லை என்றும் விஜய் கட்சியில் ஏன் சேர போகிறேன் என்றும் நான் எப்போதும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தான் நீடிப்பேன் என்றும் வேறு எந்த கட்சிக்கும் நான் செல்ல மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

எனவே நடிகை ரோஜா, விஜய் கட்சியில் சேரவில்லை என்பதும் தமிழக அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதும் இந்த பேட்டியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணா பல்கலையின் பருவத்தேர்வு கட்டணம் 50% உயர்வு: அமைச்சர் பொன்முடியின் முக்கிய அறிவிப்பு..!