Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமி 2 டிரெய்லர் வீடியோ ; போடா மூடிகிட்டு : கஸ்தூரி காட்டம்

Actres kasthuri
Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (10:42 IST)
நடிகர் விக்ரம் நடித்துள்ள சாமி2 படத்தின் டிரெய்லர் தொடர்பாக நடிகை கஸ்தூரிக்கும், விக்ரமின் ரசிகர்களுக்கும் டிவிட்டரில் மோதல் எழுந்துள்ளது.

 
நடிகை கஸ்தூரி டிவிட்டரில் பல கருத்துகளை பகிர்ந்து வருகிறார். குறிப்பாக பல விஷயங்கள் பற்றியும் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார். கண்டமேனிக்கு பலரையும் கலாய்த்தும் வருகிறார். இதில், அவர் சார்ந்த திரைப்பட விவகாரங்களும் அடக்கம்.
 
விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கியுள்ள சாமி 2 படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியானது. இந்த படம் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த கஸ்தூரி “முந்தா நாளு வந்த டீஸர் ல கலாய்ச்சிருந்த அத்தனை டெம்பிளேட்  சீன்ஸையும்  ஒண்ணு சேர்த்து ஒரு ட்ரைலெர். ஸ்ஸ்ஸப்பா !” என ஒரு பதிவை இட்டிருந்தார்.
 
இதைக்கண்டு கோபமடைந்த ஒரு விக்ரம் ரசிகர் ‘முதலில் நீங்கள் உங்கள் வயசுக்கேத்த மாதிரி நடியுங்கள். நீங்க கூட ஐயிட்டம் டான்ஸ்லாம் ஆடுறீங்கள்’ எனக்கூறி அவரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார்.
 
இதற்கு “சொந்த பொண்ணை விட சின்ன வயசு பொண்ணோட டூயட் பாடுறதுதான் வயசுக்கேத்த நடிப்பா?  அந்த அளவு எனக்கு நடிக்க வராது சாமி.  ஏன்னா நான் பேய்க்கு பொறக்கல, பூதம் இல்ல. போடா மூடிக்கிட்டு” என காட்டமாக பதிலடி கொடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments