Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுகவில் இணைகிறாரா நடிகை கஸ்தூரி?

Advertiesment
, வெள்ளி, 27 அக்டோபர் 2017 (15:16 IST)
நடிகை கஸ்தூரி திமுகவில் இணைந்து அக்கட்சியின் பிரச்சார பீரங்கியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளன.


 

 
சமீப காலமாகவே அரசியல், சமூக பிரச்சனைகள் குறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கங்களில் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார். தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என ரஜினி கூறியதை கிண்டலடித்து ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகினார். அதன் பின் ரஜினியை சந்தித்து பேசி, அவர் அரசியலுக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 
 
இந்நிலையில் அவரை திமுக பக்கம்  இழுக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் அரசியலுக்கு வருவார்கள் எனக் கூறப்பட்டு வருகிறது. அதிலும், கமல்ஹாசன் அதை உறுதியே செய்துவிட்டார். 
 
இந்நிலையில், அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய கஸ்தூரி போன்ற நடிகைகளை களம் இறக்குவது நல்லது என திமுக மேலிடம் கருதுவதாக தெரிகிறது. இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடக்கத்தில் தயங்கிய கஸ்தூரி, தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள இதுவே சிறந்த வழி என முடிவெடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
திமுகவில் குஷ்பு களம் இறங்கி ஆட்டம் காட்டியது போல், அடுத்த கஸ்தூரியும் களம் இறங்கி, தேர்தலின் போது அக்கட்சியின் பிரச்சார பீரங்கியாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.கே.நகரை சுத்தம் செய்ய களமிறங்கும் திமுக; கெடு விதித்த மு.க.ஸ்டாலின்