Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலியல் தொழிலுக்கு அனுமதி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இல்லை: நடிகர் மயில்சாமி விளாசல்!

பாலியல் தொழிலுக்கு அனுமதி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இல்லை: நடிகர் மயில்சாமி விளாசல்!

Advertiesment
பாலியல் தொழிலுக்கு அனுமதி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இல்லை: நடிகர் மயில்சாமி விளாசல்!
, செவ்வாய், 17 ஜனவரி 2017 (17:18 IST)
ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத் தீ தமிழகம் முழுவதும் பற்றி எரிகிறது. மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சியால் தமிழகமே இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.


 
 
இந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்துக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்கள் கருத்தையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு பிரபலங்கள் பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்திலேயே களம் இறங்கியுள்ளனர்.
 
இந்நிலையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இளைஞர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

 

 
 
அந்த வீடியோவில் பேசிய அவர், ஜல்லிக்கட்டு குறித்த உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இந்தியாவே தலைகுனிய வேண்டும். இந்தியனாக தலைகுனிய வேண்டும். முக்கியமாக தமிழக அரசு ரொம்பவே தலைகுனிய வேண்டும். மக்கள் பெரிய போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
 
உணவு , தண்ணீர் இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் போராடுகின்றனர். அரசு தரப்பில் இருந்து அல்லது அரசியல் வாதிகள் யாராவது பேசுகீறீர்களா? பாலியல் தொழிலுக்கு அனுமதி இருக்குது, ஆனால் ஒரு விளையாட்டுக்கு தடை விதித்தா என்ன அர்த்தம்.
 
வெளிநாட்டுல இருந்து வந்த ஒரு அமைப்பு, நம்ம பாரம்பரிய விளையாட்டு மேல கேஸ் போட்டு, நமது கலாசாரத்தையே அழிக்க நினைக்குது. இந்தியாவில்தானே நாமும் இருக்கோம்.
 
சோறு தண்ணி இல்லாம மக்கள் போராடுறத பார்க்கும் போது ரொம்பவே வேதனையா இருக்கு. அரசாங்கமே அடிக்க ஆள் வச்சிருக்குது. சட்டம், ஒழுங்கை பாதுகாக்க கலெக்டரையும் வச்சுருக்குது. யாருக்காகவும் நமது உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. போராட்டத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க வேண்டாம் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.ஜி.ஆர்.-க்கு கிட்னி தானம் செய்தவர் பாஜகவில் இணைந்து அதிர்ச்சி!