Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வட சென்னை வெள்ளக்காடாக மாறும் - கமல்ஹாசன் எச்சரிக்கை

, வெள்ளி, 27 அக்டோபர் 2017 (09:33 IST)
வட சென்னை மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து பற்றி நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “ தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. முழவிவரம் கீழே” என குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
 
அதில், கோசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாற்றைவிட பன்மடங்கு பெரியி ஆறு. அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்து விட்டோம்.
 
வல்லூர் மின் நிலையமும் வட சென்னை மின் நிலையமும், தங்கள் சாம்பல் கழிவுகளை கோசஸ்தலையாற்றில் கொட்டுகின்றன. இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல வருடங்களாக போராடியும் அரசு பாராமுகமாய் உள்ளது. மீனவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து குரலெழுப்ப முற்பட்டதும் செவிடர் காதில் ஊதிய சங்குதான்.
 
பற்றாக்குறைக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும், பாரத் பெட்ரோலியமும் தங்கள் எண்ணை முனையங்களை நட்டாற்றில் கட்டியிருக்கின்றன. காமராஜர் துறைமுகத்தை விரிவுபடுத்துகிறோம் என்ற போர்வையில் கோசஸ்தலையின் கழிமுகத்தின் 1000 ஏக்கர் நிலத்தை சுருட்டும் வேலையும் நடப்பதாகக் கேள்விப்படுகிறேன். நில வியாபாரிகளுக்கு கொடுக்கும் முனஅனுரிமையையும், உதவியையும் ஏழை மக்களுக்கு கொடுக்காத எந்த அரசும் நல் ஆற்றை புறக்கணிக்கும்.உதவாக்கரைகள்தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
மேலும், வழக்கமாக வரும் மழை போன வருடம் போல் பெய்தாலே வட சென்னை வெள்ளக்காடாகும். வானிலை ஆராய்ச்சியாளரின் எதிர்பார்ப்புப்படி இவ்வருடம் அதிக மழை வரும் பட்சத்தில் 10 லட்சம் வடசென்னை வாழ் மக்களுக்கு பெரும் பொருட்சேதம் ஏற்படும். உயிர் சேதமும் ஏற்படும் என்பது அறிஞர்களின் அச்சம். எனவே, ஆபத்து வந்தபின் கூப்பிட்டுக் கதறாமல் முன்பே அரசையும் மக்களையும் எச்சரிக்கிறோம். மக்கள் செவிசாய்ப்பார்கள். ஆனால் அரசு? அது செவிசாய்க்காமல் மெல்லச்சாயும். அது விரைவுற நாமும் உதவலாமே” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வதேச வாரண்டியுடன் அறிமுகமாகும் பிரபல ஸ்மார்ட்போன்...