Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலா ஆதரவு அமைச்சரை நேரடியாக விளாசிய நடிகர் அரவிந்த் சாமி!

சசிகலா ஆதரவு அமைச்சரை நேரடியாக விளாசிய நடிகர் அரவிந்த் சாமி!

Advertiesment
சசிகலா ஆதரவு அமைச்சரை நேரடியாக விளாசிய நடிகர் அரவிந்த் சாமி!
, வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (08:57 IST)
சசிகலாவுக்கு ஆதரவாக உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அந்தந்த தொகுதி பொதுமக்கள் தொடர்ந்து போன் செய்து ஓபிஎஸுக்கு ஆதரவு அளிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இதனை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் சாடியிருந்தார். இதற்கு நடிகர் அரவிந்த் சாமி அவருக்கு நேரடியாக டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.


 
 
தமிழகத்தில் முதலமைச்சர் நாற்காலியை பிடிக்க போவது யார் என்ற போர் உக்கிரமாக நடைபெற்றுவருகிறது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என எம்எல்ஏக்கள் பிரிந்து கிடக்கிறார்கள். இந்நிலையில் சசிகலா அணியில் உள்ள எம்எல்ஏக்களுக்கு மக்கள் போன் செய்து ஓபிஎஸுக்கு அதரவு அளிக்க வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

 
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதில், கடந்த 48 மணி நேரமாக தொலைபேசி அழைப்புகள் வாயிலாக அதிமுக எம்எல்ஏக்களுக்கு தொந்தரவு அளிக்கப்படுகிறது. எங்களுக்கு எங்களது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்து உரிமை உள்ளது என்றார்.

 
அமைச்சரின் இந்த பதிவுக்கு நடிகர் அரவிந்த் சாமி டிவிட்டர் மூலமாக பதில் அளித்துள்ளார். அதில் அசாதாரண சூழல் நிலவும் நேரங்களில் மக்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த விரும்புவர். அது எந்த கருத்தாக இருந்தாலும் அதன்படி நீங்கள் நடந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையின்படி உங்களிடம் கருத்துகளைத் தெரிவித்திருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"சசிகலாவின் கதை முடியப்போகிறது" - கொந்தளிக்கும் அதிமுக முன்னாள் சபாநாயகர்