Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து போலீஸாரும் WhatsApp குரூப்பில் ....டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு

Advertiesment
அனைத்து போலீஸாரும் WhatsApp குரூப்பில் ....டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு
, செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (17:47 IST)
‘தமிழ்நாடு போலீஸ் வெல்ஃபேர்’ என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கப்படும் என்றும் அதில், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள் இருப்பார்கள் என்று தகவல் வெளியாகிறது.

சென்னையில், இணை ஆணையர் வெல்ஃபேர் தலைமையில் வாட்ஸ் ஆப்பில்  குரூப் ஒன்றை அமைத்து, அதில், துணை ஆணையர், உதவி ஆணையர்கள் இணைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் , கடைசி காவலர்கள் வரை  இந்த வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மற்ற நகரங்ககளில்,  துணை ஆணையர் தலைமையில் வாட்ஸ் ஆப் குரூப் அமைத்து, உதவி ஆணையர்கள், காவல்ஆய்வாளர்கள்  இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதில், காவலர்கள் நலன் சார்ந்த பதிவவுகள் உடனடியாக 30 நிமிடங்களில் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் அனுப்ப வேண்டும் என்று இந்த தகவல் 4 மணி நேரத்திற்குள் அனைத்து போலீஸார்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்து வணங்கியதில் எந்த தவறுமில்லை- அண்ணாமலை