Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் சுட்டுக் கொலை!

Sinoj
வெள்ளி, 1 மார்ச் 2024 (20:45 IST)
மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலயில், பஞ்சாப் மாநிலத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த (ஆம் ஆத்மி ) சேர்ந்த பிரமுகர் குர்பிரீத் சிங் கோபி சோழா இன்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட  தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட  மாநில கட்சிகளும் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பஞ்சாப்பில் முதல்வர்  பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த  பிரமுகர் குர்பிரீத் சிங் கோபி சோழா இன்று கபூர்தலா மாவட்டத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கோயிண்ட்வால் சாகிப் ரயில்  நிலையம் மூடப்பட்டிருந்ததால் காரில் உட்கார்ந்திருந்தார்.
 
அப்போது, அந்தக் காரின் மீது மற்றொரு கார் வந்து நின்றதும் அதிலிருந்து இறங்கிய  3 பேர் குர்பிரீத் சிங்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
 
இதில், சம்பவ இடத்திலேயே குர்பிரீத்சிங் கோபி சோழா உயிரிழந்தார். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
குர்பிரீத் சிங் மீது ஒரு கொலைவழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவர் சுல்தான்பூர் நீதிமன்றத்திற்குச் சென்றபோது கொல்லப்பட்டதாக  அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னிப்பு கேட்டும் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு! பரபரப்பு தகவல்..!

நான் நன்றாக போராடுவேன். போராட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்: பிரியங்கா காந்தி

திருப்பதி லட்டு விவகாரம்.. 5 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைப்பு..!

கோவில் அருகே கூடினால் கைது: இந்துக்களுக்கு கனடா போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த அமெரிக்க அதிபர் யார்? வாக்குப்பதிவு தொடக்கம்.. நாளை காலை முன்னிலை விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments