Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப் சேட்டையால் எரித்துக் கொல்லப்பட்ட ஆட்டோ டிரைவர்

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (14:41 IST)
திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் விளையாட்டாக செய்த காரியம் அவரின் உயிரையே குடிக்கும் அளவிற்கு போய்விட்டது.
நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டி கணபதி நகரை சேர்ந்தவர் சதீஷ். இவர் லோடு ஆட்டோவின் ஓட்டுநராக இருந்தார்.
 
இந்நிலையில் சதீஷ் கடந்த 2 ந் தேதி, தனது நண்பர்களுடன் திருச்சி மாவட்ட தொட்டியம் அருகே உள்ள ஆற்றின் ஓரம் அமர்ந்து மது குடித்துள்ளார். போதை தலைக்கு ஏறிய நிலையில் அவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர்.
 
சிறிது நேரத்திற்கு பின் ஆற்றிலிருந்து வெளியே வந்த, சதீஷ் நண்பர்கள் குளிப்பதை வீடியோவாக எடுத்து விளையாட்டாக வாட்ஸ் ஆப்பில் பரவ விட்டுள்ளார்.
 
இதனையறிந்த அவரது நண்பர்கள், போதையில் சதீஷை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். பின் சதீஷின் நண்பர்கள், பிணத்தை வண்டியில் வைத்துக் கொண்டு சிறிது தூரம் சென்று, அங்கு வைத்து பிணத்தை எரித்துள்ளனர்.
 
எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது சதீஷின் நண்பர்கள் 4 பேர் சிக்கினர்.
 
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். விளையாட்டு வினையாகும் பழமொழி ஏற்றாற்போல் விளையாட்டாக செய்த விஷயம் கொலை செய்யும் அளவிற்கு போய்விட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments