Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீட் தேர்வில் தோல்வி ; திருச்சி மாணவி தற்கொலை : தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்

Advertiesment
நீட் தேர்வில் தோல்வி ; திருச்சி மாணவி தற்கொலை : தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்
, வியாழன், 7 ஜூன் 2018 (09:41 IST)
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ என்கிற  மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

 
நீட் தேர்வால் நடைபெறும் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. சென்ற வருடம் நீட் தேர்வில் தோல்வியடைந்த தமிழகத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். 
 
அதேபோல் கடந்த 4ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே, ஐதராபாத்  மாணவி ஜஸ்லீன் கவுர்(18), நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியாததால், ஒரு வணிகவளாகத்தின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.  
webdunia

 
இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ என்கிற மாணவி நேற்று தற்கொலை செய்து கொண்டார்.  திருச்சி கண்டோன்மெண்ட் கிளை அரசு போக்குவரத்து கழக ஓட்டுனராகவும், அண்ணா தொழிற்சங்க தலைவராகவும் உள்ள கண்ணன் என்பவரின் மகளான இவர் 12ம் வகுப்பில் 907 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். நீட் தேர்வில் 24 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால் மனமுடைந்த அவர் நேற்று இரவு வீட்டில் இருந்த மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹுசேன் நியமனம்