Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுனர் இல்லாமல் பாதிவழியில் நின்ற ரயில் – பயணிகள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 15 ஜூலை 2019 (18:34 IST)
திருச்சி அருகே ரயிலை ஓட்டிக்கொண்டு வந்த டிரைவர் ஒருவர் பாதி வழியிலேயே ரயிலை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி- திண்டுக்கல் ரயில்வே தடத்தில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று பூங்கொடி ரயில்வே நிலையம் அருகே திடீரென நிறுத்தப்பட்டது. நிலைய அதிகாரிகள் ஓட்டுனரை அழைத்தும் எந்த பதிலும் இல்லை. அந்த ரயிலில் என்ன பிரச்சினை என்று பார்க்க அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர். இதனால் திருச்சி- திண்டுக்கல் வழியே செல்லும் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. ரயில்வே கேட்டுகளும் மூடப்பட்டிருந்ததால் ரயில் நிலையத்தை கடந்து செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.

அந்த சரக்கு ரயிலில் சென்று பார்த்தபோது அதில் ஓட்டுனரே இல்லை. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இது குறித்து மேலிடத்திற்கு தகவல் அனுப்பினார்கள். அவர்கள் உடனடி ஏற்பாடாக வேறொரு ரயில் ஓட்டுனரை அனுப்பி வைத்தனர். பிறகு அவர் வந்து ரயிலை எடுத்து போனார். இந்த களேபரங்கள் முடிந்து போக்குவரத்து சரிசெய்யப்பட்டு, மற்ற ரயில்களையும் அனுப்பி வைக்க சுமார் 16 மணி நேரம் ஆகி விட்டது.

ரயிலை பாதியில் விட்டு சென்ற ஓட்டுனரை தொடர்பு கொண்ட அதிகாரிகளிடம் அந்த ஓட்டுனர், தன்னை ஓய்வில்லாமல் வேலை வாங்கியதாகவும், பணிச்சுமை தாங்க முடியாமல் வண்டியை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments