Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருட சென்ற இடத்தில் பெண்ணிடம் கைவரிசை : வகையாக சிக்கிய திருடன்!

திருட சென்ற இடத்தில் பெண்ணிடம் கைவரிசை : வகையாக சிக்கிய திருடன்!
, வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (09:47 IST)
சென்னையில் குடியிருப்பு ஒன்றில் திருட சென்ற திருடன் அங்கிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா பகதூர். இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும், இவரது மனைவியும் அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலேயே வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்த பகதூர் கேட்டின் அருகே நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கியுள்ளார். அந்த சமயம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஆசாமி ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி பகதூரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அந்த பெண் அலறவே ஆசாமி தப்பி ஓடிவிட்டான்.

இதுகுறித்து பகதூர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது குடியிருப்பில் நுழைந்த ஆசாமி அமைந்தக்கரை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பது தெரிய வந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் பல நிலுவையில் உள்ளது. பால் விநியோகிப்பது போல அண்ணா நகர் சுற்றுவட்டார பகுதிகளில் திரியும் ராமகிருஷ்ணன் யாரும் கவனிக்காத சமயம் குடியிருப்புகளுக்குள் புகுந்து திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அவரை கைது செய்து போலீஸார் விசாரிக்கையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு திருட சென்றதையும், அப்போது பகதூரின் மனைவியை கண்டு சபலம் கொண்டு பாலியல் வன்கொடுமை செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திருமங்கலம் சுற்று வட்டாரப்பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பரவ இவர்கள் அலட்சியம்தான் காரணம்: 66 பேர் மீது வழக்குப்பதிவு!