இலங்கையில் இருந்து காதலனை பார்க்க சென்னை வந்த இளம்பெண் லாட்ஜில் மர்மமான முறையில் இற்ந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த மலர்மேரி என்ற பெண்ணும் சென்னையை சேர்ந்த அவினாஷ் என்பவரும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களானர். நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது .7 மாதங்களாக இருவரும் முகம் பார்க்காமல் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் மலர்மேரி காதலனை பார்க்க இலங்கையில் இருந்து சென்னை வந்துள்ளார். காதலியை அவினாஷ் ஊரப்பாக்கத்தில் ஒரு லாட்ஜில் தங்க வைத்தார். காதலியுடன் சென்னையை ஜாலியாக வலம் வந்தார்.
பின்னர் அவருக்கு ஊர் திரும்ப டிக்கெட் போட்டுக்கொடுத்தார் அவினாஷ். ஆனால் காதலன் மீதுள்ள பாசத்தால் மலர்மேரி ஊர் திரும்ப மறுத்துவிட்டார். அவினாஷ் கெஞ்சிப்பார்த்தும் மலர்மேரி ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனாலும் காதலியின் உணர்வை மதிக்காத அவினாஷ், காதலியை லாட்ஜில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். வேலை முடிந்தபின்னர் ஜாட்ஜிற்கு திரும்பிய அவினாஷ், காதலியின் அறையை தட்டியுள்ளார். வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸார் மலர்மேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின் அவினாஷை கைது செய்த போலீஸார் அவரிடம் திவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.