Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் விடுமுறை எதிரொலி..! 1300 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!!

Senthil Velan
புதன், 12 ஜூன் 2024 (12:36 IST)
பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு 1,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வரும் 15,16 தேதிகள் வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு-முகூர்த்தம்), ஜூன் 17 பக்ரீத் பண்டிகை என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 14, 15, 16 தேதிகளில் 1,270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை, கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு ஜூன் 14, 15 தேதிகளில் 30 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இவ்வாறு சென்றவர்கள் ஊர் திரும்ப ஜூன் 17-ம் தேதி பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 705 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அன்றைய தினம் பல்வேறு இடங்களில் இருந்து பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு..! ஆரத்தழுவி வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!!

தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் பயணிக்க சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments