Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெயிண்டர் ரகுவை கழுத்தறுத்து கொன்ற செண்ட்ரிங் வெள்ளையன்! – சேலத்தில் பரபரப்பு!

Advertiesment
பெயிண்டர் ரகுவை கழுத்தறுத்து கொன்ற செண்ட்ரிங் வெள்ளையன்! – சேலத்தில் பரபரப்பு!
, புதன், 26 அக்டோபர் 2022 (13:39 IST)
பெயிண்டராக வேலை பார்த்து வந்த ரகுவை மற்றொரு ரவுடியான வெள்ளையன் மருத்துவமனையில் வைத்து கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தொட்டில் பட்டியை சேர்ந்த ரகுநாதன் என்பவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பொதுவுக்கு பெயிண்டர் வேலை பார்த்தாலும் ஒரு கும்பலுடன் சேர்ந்து கொண்டு ரவுடியிச வேலைகளையும் செய்து வந்துள்ளார் ரகுநாதன்.

அதேபோல இவரது நண்பரான செண்ட்ரிங் வேலை பார்க்கும் வெள்ளையன் என்பவரும் ரவுடியாக இருந்து வந்துள்ளார். இருவரும் ஆரம்பத்தில் ஒரே கும்பலில் வேலை பார்த்து வந்த நிலையில், சமீபத்தில் ரகு அந்த கும்பலை விட்டு விலகி வேறு ரவுடி கும்பலோடு சேர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.


இதுதொடர்பாக ரகுவுக்கும், வெள்ளையனுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் சம்பவத்தன்று ரகுவின் வீட்டிற்கு ரவுடிகளுடன் சென்ற வெள்ளையன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து போலீஸார் அங்கு வர வெள்ளையன் கும்பல் அங்கிருந்து சென்றனர்.

அதை தொடர்ந்து காயம் காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார் ரகு. இதையறிந்து அங்கு மீண்டும் வந்த வெள்ளையன் கும்பல் ரகுவை சரமாரியாக தாக்கியதோடு பலர் முன்னிலையில் கழுத்தை அறுத்து ரகுவை கொன்றுள்ளனர். இதை கண்ட செவிலியர்களும், பொதுமக்களும் அலறியடித்து ஓடியுள்ளனர்.

இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார் செண்ட்ரிங் வெள்ளையன் மற்றும் அவரது கும்பலை கைது செய்துள்ளனர். மருத்துவமனையில் பலர் முன்னிலையில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனி ஞாயிறு மட்டும் தான்: நவம்பர் மாதம் வங்கி விடுமுறை இல்லை!