என் வார்த்தைகள் வெட்டி ஒட்டப்பட்டுள்ளன… ஆ ராசா விளக்கம்!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (17:58 IST)
எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ ராசா தன் பேச்சுக்கு விளக்கமளித்துள்ளார்.

தேர்தலால் தமிழகமே பரபரப்பாகியுள்ளது. இந்நிலையில் தலைவர்கள் தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் ஒருவரை மாற்றி ஒருவரை குற்றம்சாட்டுவது வாடிக்கையாகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் ஆ ராசா எடப்பாடி கள்ள உறவில் பிறந்த குழந்தை என சொல்லியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சாரத்தின் போது பேசிய அவர் ‘பத்திரிக்கைகள் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமியை மிகப்பெரிய தலைவரைப் போல சித்தரிக்கிறார்கள் . பொதுவாழ்வில் அவர் எட்டியிருக்கும் உயரம் ஒன்றும் இல்லை. நல்ல உறவில் நல்ல முறையில் பிறந்த ஆரோக்யமான குழந்தைதான் ஸ்டாலின் என்றால், கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைதான் எடப்பாடி பழனிச்சாமி. ’ எனப் பேச அந்த பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆ ராசாவின் இந்த பேச்சை திமுகவினரே எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். இது சம்மந்தமாக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து ராசா இப்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘நான் பேசியதை வெட்டியும் ஒட்டியும் பரப்பி வருவதை அறிகிறேன். நான் முதல்வரின் பிறப்பையோ புகழையோ கலங்கம் செய்யும் வகையில் பேசவில்லை. அவரின் அரசியல் ஆளுமையை ஸ்டாலினோடு ஒப்பிட்டேன். உள்நோக்கத்தோடு எதையும் பேசவில்லை. அதை தவறாக புரிந்துக்கொண்டால் அதற்காக நான் பொறுப்பேற்க முடியாது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments