Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நண்பரைக் கொன்று வீட்டில் புதைத்த நபர் கைது

Advertiesment
நண்பரைக் கொன்று வீட்டில் புதைத்த நபர் கைது
, வியாழன், 24 மே 2018 (07:14 IST)
நண்பருடன் ஏற்பட்ட தகராறில், நபர் ஒருவர் நண்பனைக் கொன்று வீட்டில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் விஜய். இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் கவுத் என்பவருடன் தங்கி இரும்பு உருக்கு ஆலையில்  வேலை பார்த்து வந்தார்.
 
இந்நிலையில் விஜய்யும் சுரேஷும் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மது அருந்திக்கொண்டிருந்தபோது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், சுரேஷ் விஜய்யை கொலை செய்து வீட்டினுள் புதைத்துவிட்டு தலைமறைவானார்.
 
இதனையடுத்து விஜய்யின் தாயார் தன் மகனை காணவில்லை என வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
 
புகாரின் பேரில் விஜய்யை தேடி வந்த போலீஸார், விஜய் செல்போனின் ஐ.எம்.இ. நம்பரை வைத்து விசாரித்ததில், செல்போன் சென்னை எண்ணூர் அருகே பயன்படுத்துவது தெரிந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சுரேஷ் கவுத்தை மடக்கி பிடித்தனர்.
 
அவனிடன் விசாரித்ததில் நண்பன் விஜய்யை கொலை செய்து புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தான். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், சுரேஷ் கவுத்தின் அறைக்கு சென்று விஜய்யின் பிணத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸார் சுரேஷ் கவுத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுனருடன் முதல்வர், துணை முதல்வர் திடீர் சந்திப்பு!