Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தீக்குளித்தவர் மரணம்

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (08:53 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் தமிழர் வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த வேல்முருகன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும்  நெய்வேலி தெர்மல் காவல் நிலைய போலீஸார் அவர் மீது தேசத்துரோக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். நெய்வேலியில் ஒரு கூட்டத்தில் அவர் பேசிய பேச்சுக்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்தாக கூறப்பட்டது. இதனையடுத்து வேல்முருகன் மீது  124 (ஏ), 153, 153 (ஏ)(1)(பி) மற்றும் 505 (1)(பி) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
 
இந்த நிலையில்  சுங்கச் சாவடி தாக்கப்பட்ட வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வேல்முருகன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்தக் கட்சியின் பிரமுகர் ஜெகன் என்பவர் தீக்குளித்தார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தா ஜெகன் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் மரணம் அடைந்தார். இவர் கடலூர் மாவட்டம் பெரியாண்டிகுழி கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொலையை காட்டிக் கொடுத்த ‘கூகிள் மேப்’! ஒரு ஆண்டு கழித்து வெளியான மர்மம்! - என்ன நடந்தது?

எங்கே பழனிசாமி? கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள்.. அமைச்சர் ரகுபதி

எம்பிக்களை தள்ளிவிட்ட விவகாரம்: ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

14 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுதலையா? நீதிபதி விதித்த நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments