Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உறவினரிடம் பேச மறுத்த மனைவி: கத்தியால் குத்திய கணவன்!

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (09:44 IST)
கோயம்புத்தூர் அருகே உறவினரிடம் போனில் பேச மனைவி மறுத்ததால் கணவன் கத்தியால் குத்திக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் வசித்து வருபவர் சபரி ராஜ். கட்டிட காண்ட்ராக்ட் தொழில் செய்து வரும் இவருக்கு பரிமளம் என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகளும் உள்ளார்.

இந்நிலையில் சபரிராஜின் உறவினர் ஒருவர் வீட்டு கிரகப்பிரவேச அழைப்பிதழ் வைப்பதற்காக சபரிராஜுக்கு போன் செய்துள்ளார். அப்போது சபரிராஜ் மது அருந்திவிட்டு போதையாக இருந்துள்ளார். தனது மனைவியிடம் போனை கொடுத்து உறவினருடன் பேசும்படி கூறியிருக்கிறார். அவரது மனைவி பரிமளம் பிறகு பேசுவதாக கூறியிருக்கிறார்.

இதனால் மதுபோதையில் இருந்த சபரிராஜ் தனது மனைவியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் வளரவே ஆத்திரமடைந்த சபரிராஜ் சமையலறையில் இருந்த கத்தியால் தன்னை தானே குத்திக் கொண்டுள்ளார். ரத்த வெள்ளத்தை சரிந்த அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்டர்.. மதுரையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை..!

அதிமுகவை கைப்பற்ற ஆபரேசன் தாமரை? செங்கோட்டையன் சொல்வது என்ன?

இன்று முதல் 45 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. ரூ.75ல் இருந்து ரூ.110 கட்டணம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்கள் வெற்றி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (01.04.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments