Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் சிலை அவமதிப்பு - வழக்கறிஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (14:39 IST)
பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் ஜெகதீசன் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 17 ஆம் தேதி தெமிழகமெங்கும் பெரியாரின் 140வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவரது சிலைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
 
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அந்த வழியாக வந்த வழக்கறிஞர் ஜெகதீசன் என்பவர் தன் காலில் இருந்த காலணியை எடுத்து பெரியார் சிலை மீது வீசினார்.
 
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். இச்சம்பவம் தமிழகமெங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
 
இந்நிலையில் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வனாதன் உத்தரவின் பேரில் ஜெகதீசன் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments