Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவி: குத்திக் கொன்ற கொடூர கணவன்

உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவி: குத்திக் கொன்ற கொடூர கணவன்
, செவ்வாய், 11 டிசம்பர் 2018 (09:28 IST)
திருப்பூரில் உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவியை கணவன் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அண்ணா நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி கோமதி இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மூர்த்தி அன்றாடம் வேலை முடிந்த பின்னர் வீட்டிற்கு குடித்துவிட்டு வரும் பழக்கத்தை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது சண்டை இருந்து வந்துள்ளது.
 
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த மூர்த்தி, மனைவியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளான். ஏற்கனவே மூர்த்தி மீது கடும் கோபத்தில் இருந்த கோமதி, இதற்கு மறுத்துவிட்டார். இதனால் கடும் கோபமடைந்த மூர்த்தி மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் கோமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த அந்த மனித மிருகம் மூர்த்தியை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்று மாநிலங்களில் முன்னிலையில் காங்கிரஸ் –தேர்தல் முடிவு அப்டேட்