Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாப்பிள்ளை கிடைக்காததால் விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (11:17 IST)
திருச்சியில் அரசு வேலைப் பார்க்கும் மாப்பிள்ளை கிடைக்காததால் இளம்பெண் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் பாலக்கரையைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் சிவசங்கரி (32). பட்டதாரியான இவருக்கு திருமணம் முடிக்க, அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர். ஆனால் சிவசங்கரிக்கு அரசு வேலைப் பார்க்கும் மாப்பிள்ளை தான் தனக்கு கணவராக வர வேண்டும் என ஆசை இருந்தது. ஆனால் அவர் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை, தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இதுபற்றி சிவசங்கரி  பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் சிவசங்கரிக்கு ஏற்கனவே, திருமண வயதை கடந்து விட்டதாலும், அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளை கிடைக்காததாலும் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த சிவசங்கரி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிவசங்கரியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்