Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயசூரியனுக்கு வாக்களித்தால் இரட்டை இலையில் விளக்கு எரிகிறதா? அவினாசியில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (11:27 IST)
உதயசூரியனுக்கு வாக்கு அளித்தால் இரட்டை இலையில் விளக்கு எரிவதாக அவிநாசி பகுதியில் திமுகவினர் புகார் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்தியாவில் உள்ள அனைத்து தேர்தலும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம்தான் நடைபெற்று வருகிறது என்பதும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் அவ்வப்போது தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே
 
ஏற்கனவே நடைபெற்ற தேர்தலில் ஒரு கட்சியின் சின்னத்துக்கு வாக்கு அளித்தால் இன்னொரு கட்சியின் சின்னத்தில் விளக்கு எரிவதாகவும் அந்த கட்சிக்கு அந்த வாக்கு பதிவு செய்யப்படுவதாகவும் புகார்கள் கூறப்பட்டன. ஆனால் இந்த புகார் குறித்து தேர்தல் ஆணையம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இது அர்த்தமில்லாத புகார் என்றும் கூறியது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் காலை 7 முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட கனியாம்பூன்டி என்ற தொகுதியில் 312வது வாக்குச்சாவடியில் இதுகுறித்து பிரச்சனை எழுந்தது. அந்த வாக்குச்சாவடியில் உதயசூரியன் சின்னத்தில் ஒருவர் வாக்களித்ததாகவும் ஆனால் அப்போது இரட்டை இலை சின்னத்தில் விளக்கு எரிவதாகவும் வாக்காளர் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டு இயந்திரங்கள் சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments