Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

98 பேருக்கு பணி நியமன ஆணை : மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Advertiesment
ஊரக வளர்ச்சித்துறை முகஸ்டாலின் பொறியியல் பிரிவு அலுவலர்கள்
சென்னை , சனி, 28 பிப்ரவரி 2009 (14:52 IST)
ஊரக வள‌ர்‌ச்‌‌சி‌த்துறை‌யி‌ல் பொ‌றி‌யிய‌ல் ‌பி‌ரிவு அலுவல‌ர்க‌ள் 98 பேரு‌க்கு ப‌ணி ‌நியமனை ஆணையை உ‌ள்ளா‌ட்‌சி‌த்துறை அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் இ‌ன்று வழ‌ங்‌கினா‌ர்.

கடந்த கால அ.தி.மு.க ஆட்சி காலத்தில் காலி பணியிடங்களை நிரப்பிட தடை ஆணை வழங்கப்பட்டிருந்தது. கருணை அடிப்படை பணி இடங்களை பூர்த்தி செய்திடவும் தடை செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக, தற்போதைய ‌தி.மு.க. அரசு மீண்டும் பதவியேற்றுக் கொண்டபோது மே 2006 ல் ஊரக வளர்ச்சித் துறையில் மட்டும் மக்கள் நலப்பணியாளர்கள் உள்ளிட்ட 17,819 பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனை பூர்த்தி செய்திட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில், புதிதாக நேரடி நியமனம் செய்யப்பட்ட 44 பணிமேற்பார் வையாளர்கள், 23 இளநிலை வரைவு அலுவலர்கள் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் நியமனம் பெற்ற 31 உதவிதிட்ட மேலாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையிலும், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலமாகவும் நேரடி நியமனம் செய்யப்பட்ட இந்த அலுவலர்கள் அனைவரும் சேவை மனப்பான்மையுடன் மக்கள் சேவையில் ஈடுபடும் வகையில் சிறந்த முறையில் பணி புரிய வேண்டும் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இந்த வேலைவாய்ப்புடன் காலியாக இருந்த 17,819 பணியிடங்களில், 16,457 பணியிடங்கள் இதுவரை நிரப்பப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள காலிப் பணி இடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக இருந்த, அலுவலக உதவியாளர் பணியிடம் தொடங்கி, ஓட்டுநர், இரவு காவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், சாலை ஆய்வாளர், பணி மேற்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர், உதவிப் பொறியாளர், உதவி இயக்குநர்கள், உதவி செயற் பொறியாளர்கள் என பல்வேறு நிலையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஊரக வளர்ச்சித் துறை, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், சுனாமி திட்ட செயலாக்க அலகு மற்றும் மகளிர் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வளர்ச்சிப் பணிகளை துரிதமாக நிறைவேற்றவும், ஊராட்சி நிர்வாகத்தை செம்மையாக நடைமுறைபடுத்தவும், பெரிதும் உதவியுள்ளது என்றும் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலர் அஷோக் வர்தன் ஷெட்டி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட இயக்குநர், என். முருகானந்தம், மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரும் உடன் இருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil