Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா

Webdunia
திங்கள், 11 மே 2020 (16:38 IST)
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் மிக அதிகமாகி வருகிறது. சென்னை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது
 
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்ட மாவட்டத்தில் உள்ள பரங்கிமலையில் 44 பேர்களுக்கும், கூடுவாஞ்சேரியில் 23 பேர்களுக்கும், கேளம்பாக்கம் பகுதியில் 6 பேர்களுக்கும், அச்சிறுப்பாக்கம் பகுதியில் 4 பேர்களுக்கும், செங்கல்பட்டு பகுதியில் 3 பேர்களுக்கும் என மொத்தம் 91 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். 
 
ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் 267 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments