Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி கோயில் திருவிழா – நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு !

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (09:01 IST)
திருச்சியில் உள்ள துறையூர் கருப்பசாமி கோயிலில் திருவிழாவின் போது நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள கருப்பசாமி கோயில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி சித்ரா பௌர்னமி விழா கொண்டாடப்பட்டது. அதையடுத்து இரண்டு நாட்கள் கழித்து நேற்று பக்தர்களுக்கு உண்டியலில் உள்ள பிடிக்காசு கொடுக்கும் விழா நடைபெற்றது.

அந்த பிடிக்காசை வாங்கி வீட்டில் வைத்து வழிபடுவது அப்பகுதி மக்களின் ஐதீகமாக இருந்து வந்துள்ளது. இதற்காக திருச்சி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இக்கோயிலுக்கு வந்துள்ளார்கள். ஆனால் இம்முறை எதிர்பார்த்ததை விட அதிகளவில் மக்கள் கூட்டம் வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமாகியுள்ளது. இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு உருவாகியுள்ளது.

இதனால் காசு வாங்கும் போது மக்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு முன்னேறி செல்ல கூட்டத்தில் உள்ள சிலர் நெரிசலில் கீழே விழுந்துள்ளனர். அவர்கள் மேல் மக்கள் ஏறி சென்றதால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனஎ. கோயில் திருவிழாவின் போது நடந்துள்ள இந்த அசம்பாவிதம் அப்பகுதி மக்களுக்கு இடையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments