Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வயது சிறுமி பள்ளி கழிவறையில் கற்பழிக்கப்பட்ட கொடூரம்!

6 வயது சிறுமி பள்ளி கழிவறையில் கற்பழிக்கப்பட்ட கொடூரம்!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (16:21 IST)
டெல்லியில் தெற்குப் பகுதியில் கடந்த புதன் கிழமை தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி ஒருவர் பள்ளி கழிப்பறையிலேயே வைத்து கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.


 
 
டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றில் முதலாம் வகுப்பு படித்து வரும் 6 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து மதியம் வீடு திரும்பிய போது தனது பெற்றோரிடம் தான் பள்ளி கழிவறையில் வைத்து கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை கூறியுள்ளார்.
 
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கற்பழிக்கப்பட்டதை உறுதிசெய்துள்ளனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்டது குறிப்பிட்ட பள்ளியில் சுத்தம் செய்யும் ஊழியர் என்பது தெரியவந்துள்ளது. அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் குறித்த பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதில் அந்தப் பள்ளி பேருந்து ஓட்டுநரின் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்