Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்து கொள்ளையடித்த 6 பேர் கைது!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (07:55 IST)
ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்து கொள்ளையடித்த 6 பேர் கைது!
திருப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏடிஎம் இயந்திரத்தை அப்படியே பெயர்த்து எடுத்து கொள்ளையடித்த ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர் 
 
திருப்பூரை சேர்ந்த நால்ரோடு என்ற பகுதியில் இயங்கி வந்த பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் எந்திரத்தை அப்படியே மர்ம நபர்கள் சிலர் பெயர்த்தெடுத்து கொள்ளையடித்தனர். கடந்த 28ஆம் தேதி நடந்த இந்த கொள்ளையை விசாரணை செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன
 
இந்த நிலையில் ஏடிஎம் இயந்திரம் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கார் விஜயமங்கலம் என்ற பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் உடைக்கப்பட்ட நிலையில் இருந்த ஏடிஎம் எந்திரத்தை கண்டுபிடித்தனர்.
 
இதுகுறித்து விசாரணை செய்ததில் கருங்கல்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் தான் இந்த கொள்ளைக்கு காரணம் என தெரிய வந்ததை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 6 பேரும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் 69 ஆயிரம் ரூபாய் பணம் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 9 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments