Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைகிறது பெட்ரோல், டீசல் விலை: வரியை குறைக்க மத்திய அரசு முடிவா?

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (07:45 IST)
பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவர் அவதியில் இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மத்திய நிதியமைச்சகம் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் கூறியபோது பெட்ரோல் டீசல் உள்பட எரிபொருள் மீதான வரியை எந்த அளவுக்கு குறைக்க முடியும் என அரசு ஆலோசித்து வருவதாகவும் இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே ஒரு சில மாநிலங்கள் வாட் வரியை குறைத்து உள்ளதால் அந்த மாநிலங்களில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு எரிபொருள் மீதான வரியை பெருமளவு குறைத்தால் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை பெருமளவு குறையும் என்று கூறப்படுகிறது
 
தமிழகம் உள்பட 5 மாநில தேர்தலை கணக்கில் கொண்டு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments