Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5795 பேருக்கு கொரோனா பாதிப்பு: சென்னையில் எத்தனை பேர்?

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (18:40 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 5795 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 355,449 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 5795 பேர்களில் 1186 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 120,267 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றும் 1000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 116 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 6123 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 6384 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 293,171 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 65,592 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 37,78,249என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

தொழிற்சாலை பாய்லர் வெடித்து தீ விபத்து: 10 பேர் பலி.. 48 பேர் காயம்..!

மனைவியை அபகரித்து சொத்தையும் கேட்ட கட்சி தலைவர்! ஆள் வைத்து கதை முடித்த காங். பிரமுகர்!

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments