Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரோனா: பாதிப்பு 5516, குணமடைந்தோர் 5206!

Webdunia
ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (18:16 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 5516 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 541,993 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 5516 பேர்களில் 996 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 155,639 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றும் 1000ஐ குறைந்த கொரோனா பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 8811 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 5206 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 486,479 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 84,338 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 62,74,931 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் பேசவில்லை..! பிரதமர் மோடி..!!

என்ன திமிரு இருந்தா என் லவ்வரையே கல்யாணம் பண்ணுவ! மாப்பிள்ளையை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்! – அதிர்ச்சி வீடியோ!

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கிய எலான் மஸ்க்.. இந்தியாவில் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments