Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே பராமரிப்பு பணி.. நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து..!

Chennai electric train

Mahendran

, சனி, 2 மார்ச் 2024 (10:50 IST)
சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நாளை கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளதால் பயணிகள் கவலையில் உள்ளனர். இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
 
சென்னை கடற்கரையில் இருந்து காலை 11 மணி முதல் மதியம் 2.15 மணி வரை செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, செங்கல்பட்டில் இருந்து காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
 
சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் காஞ்சீபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் 25-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப் பட்டது" இவ்வாறு தெற்கு ரயில்வேயின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஒரே நாளில் 800 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!