Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 4150 பேர் இன்று கொரோனாவால் பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2020 (18:52 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 4150 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 4150 பேர்களில் 1713 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 68,254 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் நேற்றும் இன்றும் கொரோனா பாதிப்பு 2000ஐ குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1510 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 2186  பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 62,778 என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று 34,831 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் 13,41,715 பேர்களுக்கு மொத்தம் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈவிஎம் மிஷின் மீது நம்பிக்கை இல்லை: வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி பிரசாரம்: கார்கே

டெல்டா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம்!

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments