Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு சென்னையில் தடை இல்லை: காவல் ஆணையர் தகவல்

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2020 (17:58 IST)
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை விவகாரத்தில் ஏற்கனவே காவல்துறையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இளைஞர்களையும் கைது செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது 
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறை தலைமை அறிவுறுத்தி உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. இதனை அடுத்து பல மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரிகள் பிரண்ட்ஸ் ஆப் போலீஸை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளனர்
 
இந்த நிலையில் சென்னையில் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை என்று சொல்ல முடியாது என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் அவர்கள் தெரிவித்துள்ளார். பொதுமக்களோடு போலீசை இணைக்கும் ஒரு உதவியை செய்வதுதான் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பணி என்றும் அவர்களை தன்னார்வலர்கள் என்றுதான் கூறுவதாகவும் மக்கள் சேவை செய்ய விரும்பும் அவர்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும் கூறியுள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் போலீஸ் அதிகாரத்தை அவர்கள் பயன்படுத்த முடியாது என்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மீது யார் மீதாவது புகார் இருந்தால் அவர்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்-இல் இருப்பவர்கள் தனியாக செயல்பட மாட்டார்கள் என்றும் அவர்களுடன் போலீசும் இருப்பார்கள் என்றும் போலீசுக்கு ஒத்துழைப்பு தருவது மட்டுமே அவர்களது பணி என்றும் காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments