Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை :62 வயது முதியவர் போக்ஸோவில் கைது!

Mahendran
புதன், 22 ஜனவரி 2025 (17:36 IST)
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 62 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதை அடுத்து காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான தண்டனையும் வாங்கித் தரப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் திருப்பூர்  மாவட்டம் காங்கேயம் அருகே 4 வயது சிறுமிக்கு 62 வயது முதியவர் சண்முகம் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி  தாயார் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கையின் படி சண்முகம் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
 
சிறுமியின் தாயார் சாலையோரம் தள்ளுவண்டி கடை நடத்திவரும் நிலையில் அந்த கடைக்கு உதவி செய்வது போல் சண்முகம் சில நாட்களாக நடித்துள்ளார். அப்போது சிறுமியின் தாயார் கடையில் இல்லாத நேரத்தில் சிறுமியுடன் அவர் அத்துமீறியதாகவும் பாலியல் கொள்ளை தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.
 
இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறிய நிலையில் அவர் அதிர்ச்சி அடைந்து உடனே சண்முகம் மீது காவல்துறையில் புகார் அளித்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 62 வயது முதியவர், பேத்தி வயதில் உள்ள நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை :62 வயது முதியவர் போக்ஸோவில் கைது!

அவர் இல்லைன்னா உயிரே போயிருக்கும்! காப்பாற்றிய ஆட்டோ டிரைவரை அழைத்து நன்றி சொன்ன சயிஃப் அலிகான்!

சமணர் குகைக்கு பச்சை பெயிண்ட் அடித்த மர்ம நபர்கள்! - திருப்பரங்குன்றத்தில் தொடரும் மத பிரச்சினை!

பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ்.. நிதிஷ் குமார் கட்சி அறிவிப்பு..!

சென்னை அண்ணாநகர் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. இளம்பெண் கைது..!

அடுத்த கட்டுரையில்