Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 24 மணிநேரத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை – சென்னையை ஏமாற்றும் மழை !

Webdunia
சனி, 20 ஏப்ரல் 2019 (15:24 IST)
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழைப் பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இந்தாண்டு கோடைக்காலம் வரும் முன்னரே வெய்யிலின் தாக்கம் அதிகமாகி வந்தது. நகர்ப் பகுதிகளில் வெய்யில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்ததே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

அதையடுத்து மக்கள் இந்த கோடையை எப்படி சமாளிக்கப்போகிறோம் என தெரியாமல் அச்சமுற்றனர். ஆனால் இந்த ஆண்டு கோடையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியது மக்களுக்கு ஒரே ஆறுதலாக இருந்தது. அதையடுத்து கடந்த சில தினங்களாக தமிழகத்தின் சில உள்மாவட்டங்களில் மழைப் பெய்தது. அதையடுத்து இன்னும் 24 மணிநேரத்தில் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆனால் சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக வெப்பநிலை 37 டிகிரியும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments